சைலண்ட்டாக போட்டியாளர்களை முந்திய லாஸ்லியா...பிக் பாஸ் வாக்குகள் நிலவரம்!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 103 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி,சேரன்,கவின் மற்றும் தர்ஷன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் அவருக்கு அடுத்து சாண்டி ஆகிய இருவரும் இறுதி சுற்றில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இதனையடுத்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

losliya

இந்த நிலையில் தற்போது நிலவரப்படி முகேன் முதலிடத்திலும், லாஸ்லியா இரண்டாவது இடத்திலும், சாண்டி மூன்றாவது இடத்திலும், கடைசி இடத்தில் ஷெரினும் உள்ளனர். தற்போது நிலவரப்படி முகேன் 43% சதவிகித வாக்குகளும், லாஸ்லியா 30% சதவிகித வாக்குகளும், சாண்டி 23% சதவிகித வாக்குகளும், ஷெரின் 6% சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் சாண்டி டைட்டில் வின்னர் போட்டியில் கடுமையான போட்டியாளராக இருப்பார் அல்லது இரண்டாவது இடத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிலவரப்படி சாண்டியை பின்னுக்கு தள்ளி லாஸ்லியா சைலண்ட்டாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். தற்போது வரை முகேன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இன்னும் ஒரு நாள் இருப்பதால் இரண்டாவது, மூன்றாவது நிலையில் மாற்றம் வந்தாலும் வரலாம் என்று கூறிவருகின்றனர்.

bigboss contest kamalhaasan losliya tv show
இதையும் படியுங்கள்
Subscribe