தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

Advertisment

big boss

இதனையடுத்து சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் எவிக்சன் லிஸ்டில் உள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளரக இருந்த நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு இணையதள ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, தான் 12ம் வகுப்பு படிக்கும்போது 9ம் வகுப்பு படிக்கும் பையனுடன் டேட்டிங் சென்றேன் என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் அதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை எனவும் கூறியது தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தன்னை கவர வேண்டும் என்றால் நல்ல பர்ஃப்யூம் போட்டிருக்க வேண்டும். அதோடு உயரமாக இருப்பவராக இருக்க வேண்டும். முகத்தில் தாடி வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

big boss

Advertisment

உடலில் டாட்டூஸ் போட்டிருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேசத் தெரிந்திருக்க வேண்டும் என யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார். அதே போல் தெலுங்கு நடிகரில் ஒருவரை திருமணம் செய்ய வேணும் நினைத்தால் விஜய் தேவரகொண்டாவை தான் திருமணம் செய்வேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இருட்டு அறை முரட்டு குத்து படத்தில் நடித்தவர். அந்த படம் தமிழகத்தில் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பிக் பாஸ் 1ல் வெற்றியாளரக இருந்த ஆரவ்வுடன் ராஜபீமா, மகத்துடன் உத்தமன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக இருந்த போது மகத்துடன் இவருக்கு காதல் ஏற்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது.