தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது வரை மூன்று சீசன்களை கடந்துள்ளது. இந்த மூன்று சீசன்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் நடிகர் ஆரவும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகேனும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக இருந்த நடிகை குழந்தை ஒன்றை தத்தெடுக்க உதவ வேண்டும் என்று லாரன்ஸிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இவர் டான்ஸ் மாஸ்டர் சண்டியின் முதல் மனைவி. சாண்டியும், காஜலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
குழந்தை தத்தெடுப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காஜல் பதிவொன்றை போட்டுள்ளார். அதில் தங்களது போன் நம்பர் தவறி விட்டது மாஸ்டர். நான் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறேன். குழந்தை இல்லாமல் வாழ்க்கை முழுமையடையவில்லை. குழந்தை தத்தெடுப்பது இந்த காலத்தில் எளிதான காரியமும் அல்ல. ஒரு குழந்தையைத் தத்தெடுக்க உங்களது உதவி தேவை. அந்தக் குழந்தையின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும். இந்த உதவியை நீங்கள் எனக்கு செய்தால் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்" என்று ராகவா லாரன்ஸிடம் கூறியுள்ளார்.