தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ளது. இரண்டு சீசன்களை போல் மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 17 போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொரு போட்டியாளரும் மீதும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரேஷ்மா மூன்றாவது திருமணம் செய்யப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
பிக் பாஸ் நடிகை ரேஷ்மா, எழில் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், காமெடி நடிகர் சூரி நடிப்பில் வெளி வந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரி ஜோடியாக புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் வரும் ‘புஷ்பா புருஷன் நீ தானா' என்ற காமெடி மக்கள் மத்தியில் பிரபலமானது. நடிகை ரேஷ்மாவிற்கு முதலில் பெற்றோர் பார்த்த மாப்பிளையுடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன், மனைவிக்குள் நடந்த கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்பு அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். அங்கு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது இரண்டாவது கணவரையும் பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கமான ட்விட்டரில், ‘வாழ்க்கை மிகக் குறுகியது. உங்களைச் சிரிக்க வைப்பவர்களுடனும், அன்பு செலுத்துபவர்களுடனும் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள்’ என்று கூறியிருந்தார். அதன் பின்பு சமூக வலைத்தளங்களில் நடிகை ரேஷ்மா மூன்றாவது திருமணம் செய்யப் போகிறார் என்று தகவல் பரவியது. இதனையடுத்து திருமணம் குறித்து பரவிய தகவல் குறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அதில், எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வரும் செய்திகளில் உண்மையில்லை, வெறும் ஊகங்களே... என்னைப் பற்றிய தவறான விஷயங்களைத் தயவுசெய்து பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் வாழ்க்கை மிகக் குறுகியது. உங்களைச் சிரிக்க வைப்பவர்களுடனும், அன்பு செலுத்துபவர்களுடனும் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள்’ என கேப்ஷன் கொடுத்தது தான் இந்த வதந்திக்குக் காரணம் என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.