Advertisment

கவினின் பிரச்சனையை பெரிதாக்குவதா கோபத்தில் பிக் பாஸ் நடிகை!

தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் கவினின் தாயார் ராஜலட்சுமி, மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த பிக்பாஸ் புகழ் கவின் குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் மீது நிறைய சர்ச்சைகள் தினமும் வந்த வண்ணம் உள்ளது. இதனால் பார்வையாளர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் ஒன்றின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

actress

— Gayathri Raguramm (@gayathriraguram) August 29, 2019

அதில் கவின் ஒரு வளரும் நடிகர் அதனால் அவரது குடும்ப பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம். அவரது குடும்ப பிரச்சனையை பெரிதாக்குவதால் அவரது எதிர்காலம் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார். அதோடு தனது வெற்றிகாக போராடும் இளம் நடிகர்களில் ஒருவர்.ஆகவே ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வில் நடந்ததை பெரிதுபடுத்த வேண்டாம். மேலும் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களையும் வாழ விடுங்கள்' என்று கூறியுள்ளார்.இந்த செய்தியை வெளியிடும் ஊடகங்களுக்கு பிக்பாஸ் டீம், விஜய் டிவி, கமல்ஹாசன் ஆகியோர் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ப.சிதம்பரம் தேசிய ஊழலில் ஊடகங்கள் கவனம் செலுத்துங்கள். சின்னத்திரை சங்கமும் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

Bigboss3 gayathriraguram kamalhaasan kavin
இதையும் படியுங்கள்
Subscribe