விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டியில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏல ஆலோசனையை தட்டிக் கேட்ட சதீஷ்குமாரை கூட்டம் நடத்தியவர்கள் அடித்துக்கொன்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞர் கொலை தொடர்பாக ராமசுப்பு, முத்துராஜ், செல்வராஜ் உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதனிடையே தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூபாய் 35 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் பதவியை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்த நிலையில், மீண்டும் பதவி ஏலம் நடத்திருப்பது அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.