bhuvanagiri youth didnot died corona vaccination collector explain

கடலூர் மாவட்டம் புவனகிரி பூங்காவனத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் சிவப்பிரகாஷ்(25). இவர் கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு சிறு வயதிலிருந்தே வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்துஅவருக்கு பணிசெய்யும் நிறுவனத்தின் சார்பில் சனிக்கிழமை அன்று கரோனோ தடுப்பூசி போட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் அவர் வீட்டிற்கு வந்த போது இரவு தூங்கியுள்ளார். ஞாயிறு அதிகாலை 3 மணிக்கு திடீரென்று அவருக்கு வலிப்பு வரவே மாத்திரை கொடுத்து மீண்டும் தூங்க வைத்துள்ளனர். பின்னர் 6 மணிக்கு மேல் வலிப்பு அதிகமாக வந்ததால் அவரை ஆட்டோவில் சிதம்பரம் அரசு மருத்துமனை அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் கூறுகையில், “தடுப்பூசி போட்டதால் அவர் உயிரிழக்கவில்லை, அவருக்கு சிறுவயதிலிருந்தே வலிப்பு நோய் உள்ளது. அதன் மூலம் இது நடந்திருக்கலாம். அதே நேரத்தில் அவரது உடலை பரிசோதனைக்காக கேட்டபோது பெற்றோர்கள் தர மறுத்துவிட்டதாக” கூறுகின்றார்.

இந்த நிலையில் அவரது தந்தை கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு ஈமெயில் மூலம் கரோனா தடுப்பு ஊசி மூலம் தான் எனது மகன் உயிரிழந்ததாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

Advertisment