தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பழைய பொருட்களை எரித்து,பொதுமக்கள் போகியைக் கொண்டாடி வருகின்றனர். பழைய பொருட்களை எரித்ததால் சென்னையில் பல்வேறு இடங்களில் பனியுடன் கூடிய புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும், சைக்கிள் பயிற்சி மேற்கொள்பவர்களும் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதனிடையே, போகிப் பண்டிகையையொட்டிகோவா ஆளுநர் மாளிகையில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தனது குடும்பத்தினருடன் போகியைக் கொண்டாடினார்.