bh

திருச்சி பெல் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் மற்றும் பொதுப்பணிதுறை நிறுவனங்களில் வேலை செய்வோர் உள்ளிட்டோர் தங்களின் பணி உயர்வுக்காக ஏ.ஐ.எம்.இ. என்கிற பயிற்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்கிற விதி உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சியானால் மட்டுமே பணி உயர்வு கிடைக்கும்.

Advertisment

இந்த தேர்வு திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் என்.ஐ.டி யில் நடைபெற்றது. அப்போது தேர்வு அறையை கண்காணித்த அதிகாரி ஒருவர் தேர்வு எழுதிய ஒருவர் மீது சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரித்தார். அவர் பெல் தொழிற்சாலையில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் விகாஷ்குமார் என்பவரின் தம்பி விஷால் குமார் என்பது தெரியவந்தது.

Advertisment

இவர் தன் அண்ணனின் பதவி உயர்வுக்காக பீகாரில் இருந்து வந்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்பு தேர்வு அதிகாரிகள் அவரை துவாக்குடி போலிசார் வசம் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.