Advertisment

அரசின் முதலீட்டு விலக்கு, தனியார்மயமாக்கல், தேசிய பணமாக்கல், பெருநிறுவன மயமாக்கல் கொள்கைக்கு எதிராக பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் எத்திராஜ் காலேஜ் சாலையில் அமைந்துள்ள போஸ்டல் அக்கவுண்ட் அலுவலக வாயிலில் (சங்கீதா ஓட்டல் எதிர் புறம்) உணவு இடைவேளையின் போது போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத தலைவர் ஹிரன்மைபாண்ட்யாபங்கேற்றார். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பொதுத்துறை நிறுவனங்களைக் காப்போம், தேசிய நிறுவனங்களைக் காப்போம் என கோஷங்களை எழுப்பினர்.