மகாகவி பாரதியாரின் 138வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் இருந்து பாரதியாரின் உருவசிலை ஜதி பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. பாரதநாட்டியம், பஜனை பாடல் என பாரதியாரின் இல்லம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மா.பா.பாண்டியராஜன், பாஜக-வின் இல.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பல்லக்கு தூக்கினர்.