pon radhakrishnan speech

Advertisment

பாரதியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாலம் அமைப்பார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் அருகே உள்ள மகாகவி பாரதியார் பள்ளியில் நடந்த விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் டெல்லி கணேஷ், விசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், சமூக நீதி பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை. ராமானுஜரைவிட சமூக நீதி கொண்ட வந்தவர்கள் யாரேனும் உள்ளார்களா? சிங்கள தீவுக்கு பாலம் அமைப்போம் என்று பாரதி கூறினார். அதனை செயல்படுத்த மத்திய அரசு சிந்தித்துக்கொண்டிருக்கிறது. அவர் அந்த பாடலை எழுதியிருந்த காலக்காலத்தில் நரேந்திர மோடி உதித்திருக்க மாட்டார். ஆனால் அவர் ஒன்றை கனவு காண்றிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு பிரதமர்தான் வருவார். அவர் செய்யத்தான் போகிறார் என அவர் கனவு காண்றிருக்கிறார்.