Advertisment

பாரதியாரின் பேத்தி காலமானார்

bharathiyar granddaughter passed away

பாரதியாரின்பேத்தி லலிதா பாரதி நேற்று சென்னையில் காலமானார்.

Advertisment

சுதந்திரப்போராட்ட வீரர், கவிஞர், பத்திரிகையாளர் எனபன்முகத்தன்மைகொண்டவர்மகாகவி பாரதியார். இவரின் மூத்த மகளான தங்கம்மாள் மகள் லலிதா பாரதி ஆவார். இவருக்கு வயது 94. மிகச் சிறந்த கவிஞரான இவர் 40 ஆண்டுகள் இசை ஆசிரியராகப் பணியாற்றியவர். மேலும் தனது தாத்தாவான பாரதியாரின் பாடல்களை இசை வடிவில் பரப்பும் பணியிலும்தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக லலிதா பாரதி நேற்று காலமானார். இவரதுமரணம் தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இவரின் மறைவுக்குதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கல்களைத்தெரிவித்துள்ளனர்.

bharathiyar tamil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe