Advertisment

"ரஜினி தமிழர்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்" - பாரதிராஜா

கடந்த 10-ஆம் தேதி சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த ஐ.பி.எல் எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு நபர் சீருடையில் இருந்த காவலரை தாக்கியத்திற்கு ''இது வன்முறையின் உச்சக்கட்டம்'' என ரஜினி ட்விட் செய்திருந்தார்.

Advertisment

தமிழர் கலை பண்பாட்டு பேரவை சார்பாக இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடந்த இந்த அறவழி போராட்டத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி ரஜினி அந்த ட்விட்டை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று இயக்குனர் பாரதிராஜா ரஜினியின் அந்த ட்விட்டிற்கு பதிலளித்து ரஜினிகாந்தை விமர்சித்துள்ளார்.

bharathiraja

Advertisment

"தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு தமிழர்கள் முதுகிலே உட்கார்ந்துகொண்டு கத்தி வைத்து பதம் பார்க்கும் கர்நாடக காவி ரஜினி. தமிழர்கள் எல்லாம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் ரஜினி பேசியுள்ளார். அறவழியில் போராடிய தமிழர்கள் உங்களுக்குவன்முறையாளர்களா?

தன் திரைப்படம் வெளியாகும் தருணங்களில் மட்டும் பூச்சாண்டி காட்டும் இது போன்ற நடிகனை தமிழ் திரையுலகம் இதுவரைகண்டதில்லை.இலங்கை தமிழரை கொன்று குவித்தபோது ரஜினி குரல் கொடுத்தாரா?நியூட்ரினோவிற்கு எதிராக குரல்கொடுத்தாரா?கர்நாடகாவில் சீருடையில் போலீசார்கள் தமிழர்களை அடிக்கும்போதும், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை நொறுக்கும்போதும் குரல் கொடுத்தாரா?இல்லை மீத்தேன் பற்றி ஏதேனும் அறிக்கையாவது விட்டாரா?

ஆனால் காவேரி பிரச்சனையில் மட்டும் ஒன்றுகூடிய தமிழரின் போராட்டத்தில் குறைசொல்லும் ரஜினி தமிழ் மக்களால் ஓரம்கட்டப்படுவார்.கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன், போராட்டத்தைகறைபடுத்த நினைத்த ஒருவன் செய்கையால் நாங்கள் வருந்துகிறோம். ஆனால் அதற்காக ரஜினி தமிழர்களுக்குள் சிண்டு முடியவேண்டாம்"

என்று கூறியுள்ளார்.

modi Kaveri protest seeman bharathiraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe