Skip to main content

விடைத்தாள் திருத்தியதற்கான தொகையை வழங்காமல் இழுத்தடிக்கும் பாரதிதாசன் பல்கலைகழகம் !

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

பாரதிதாசன்  பல்கலைகழகம் 4 கல்விமுறைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு , 16 பள்ளிகள், 34 துறைகள், 11 ஆய்வு மையங்கள், 195 கல்விப்பணியாளர்கள், 2300 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த பல்கலைகழகத்தில் திருச்சியை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் இருக்கும் 123 கல்லூரிகளில் ஆட்சிச் செலுத்திவருகிறது.

அதில் 123 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 3 நுண்கலைக் கல்லூரிகளும் அடங்கும். இவற்றுள் 8 அரசுக் கல்லூரியும் 11 அரசு உதவிக் கல்லூரிகளும் தன்னாட்சி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து 8 பல்கலைக்கழகக் உறுப்புக்கல்லூரிகளும் நடத்திவருகிறது.

Bharathidasan University, without paying the fee for editing the answer sheet


இந்த பல்கலைகழகத்தின் சார்பில் நடைபெற்ற சென்ற பருவ தேர்வு விடைத் தாளினை பேராசிரியர்கள் மே மாதம் திருத்தினார்கள். பொதுவாக விடைத்தாள் திருத்தினால் ஏழு நாட்களில் அதற்கான தொகை வழங்கப்பட்டுவிடும். ஒரு விடைத்தாள் திருத்த ரூபாய் 12 வழங்குகின்றது. 

கிட்டதட்ட ஒவ்வொரு பேராசிரியரும் குறைந்தது 300 பேப்பர்கள் திருத்துவது வழக்கம். தேர்வு முடிவுகள் வெளியாகி புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்று கல்லூரி ஆரம்பித்து 1 மாதத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் தற்போது வரை திருத்தப்பட்ட விடைத்தாளுக்கான தொகையினை பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழகம் வழங்கவில்லை. 

பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பேராசிரியர்களுக்கு உரிய தொகையை விரைவில் வழங்க வேண்டுமென பேராசிரியர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாரதிதாசன் பல்கலை. நுழைவுத் தேர்வில் தொழில் நுட்பக்கோளாறு; மாணவர்கள் அவதி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ph.D Online Entrance Test conducted by Bharathidasan University Technical disorder

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024 ஆவது கல்வி ஆண்டுக்கான முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 57 வகையான பாடப்பிரிவுகளில் 1092 மாணவ, மாணவியர் தேர்வுக்கு ரூ.2,000 முதல் ரூ. 2,100 வரை கட்டணமும் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் புகல் 12.15 மணி வரை நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தேர்வாளர்களுக்கு தேர்வெழுத பிரத்யேக லாகின் ஐடி(ID) மற்றும் ரகசிய குறீயீடு உள்ளிட்டவைகளும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுழைவு தேர்வு எழுத மாணவ,மாணவியர் பல்கலைக்கழக இணையதள முகவரியில் லாக் இன் செய்தனர். ஆனால் பல்கலைக்கழக இணையதளம் செயல்படவில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாகினர். 

பின்னர் தொடர்ந்து பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை. இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனிவாச ராகவன் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியவில்லை. மேலும் இதில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பணம் செலுத்தாமல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மறு தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.