பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிக நிறுத்திவைப்பு!

university

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு தேர்வு கட்டணமானது 75 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பழைய தேர்வு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வை தற்காலிகமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வம் அறிவித்துள்ளார்.

student
இதையும் படியுங்கள்
Subscribe