Advertisment

சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்ட பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கைது!

ameer

Advertisment

சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலர் உயரமான அறிவிப்பு பலகையின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன், கவுதமன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், சென்னை விமான நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe