Bharathi Mani Passed away

தமிழ் சினிமாவில் பாபா, புதுப்பேட்டை, போன்ற படங்களில் முதல்வராகவும், முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோ - ஹீரோயினுக்கு தாத்தா வேடத்தில் நடித்துள்ள பாரதி மணி இன்று மரணம் அடைந்தார்.

Advertisment

1937 செப்டம்பர் 24-ம் தேதி நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் சுப்பிரமணியம்-சிவகாமி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப்பிறந்தவர்.

Advertisment

இலக்கிய உலகத்தில் உள்ளவர்களால் பாட்டையா என்று செல்லமாக அழைக்கப்படும் மணி; பாரதி திரைப்படத்தில் பாரதிக்கு தந்தையாக நடித்த பிறகு “பாரதி மணி” ஆனார். டெல்லியில் மத்திய அரசு அதிகாரியாகப் பல வருடங்கள் பணிபுரிந்தவர். பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார், எழுத்தாளர், நடிகர்,சமையல் கலை வல்லுநர் எனப் பல முகங்களைக் கொண்டவர்.

இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ”பல நேரங்களில் பல மனிதர்கள்” என்ற பெயரிலும், பின்பு “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” என்ற பெயரில் முழுத்தொகுப்பாகவும் வெளிவந்தது .‘பாட்டையாவின் பழங்கதைகள்’ என்ற புத்தகமும் வெளிவந்திருக்கிறது.

Advertisment

லண்டன் ஸ்கூல் ஆப் டிராமாவில் குரல் வளத்துக்கான ‘Voice Culture’ சான்றிதழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.