Skip to main content

 கலைஞருக்கு பாரதரத்னா தரவேண்டும் -காதர்மொய்தீன் பேட்டி

Published on 12/08/2018 | Edited on 12/08/2018
ka

 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர்மொய்தீன் இன்று ஆகஸ்ட் 12ந்தேதி மாலை ஒரு நிகழ்ச்சிக்காக வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு வருகை தந்திருந்தார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய காதர்மொய்தீன், திமுக தலைவர் கலைஞர் தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர், சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக இருந்தார். கலைஞருக்கு பாரதரத்னா விருதை வழங்க வேண்டும்மென கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். அவரின் சாதனைக்கு மத்தியரசு நிச்சயம் பாரதரத்னா வழங்க வேண்டும். 

 

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும். இதனால் பொருளாதார இழப்பு சரி செய்யப்படும். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எல்லாமே ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். அது முடியாத காரியமும் அல்ல. அமெரிக்கா போன்ற பல வல்லரசு நாடுகள் தங்கள் நாடுகளில் ஒரே தேர்தலில் 11 வாக்குகளை செலுத்தும் வகையில் தேர்தலை நடத்துகிறது. மக்களும் சிறப்பாக வாக்களிக்கிறார்கள். அங்கு சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அதேப்போல் இந்தியாவிலும் செயல்படுத்த வேண்டும் என்றார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கத்தார் திமுக நிர்வாகிகள் கூட்டம்

Published on 15/11/2019 | Edited on 16/11/2019

 

கடந்த 10.11.2019 அன்று நடைபெற்ற கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை ஆதரித்து நன்றி தெரிவிக்கும் வகையில் கத்தார் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

 

dmk - Kathar



வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்,  கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கி கிளைக்கழகம் அமைத்துக் கொள்ள அங்கீகாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.


 

 

எதிர்வரும் 14.11.2019 வியாழன் மாலை 7 மணியளவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. அண்ணாவின் வழியில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அடியொற்றி மு.க.ஸ்டாலின் பின் அணிவகுத்து அயராது உழைத்து கழக வெற்றிக்கு பாடுபடுவோமென உறுதிமொழி ஏற்கப்பட்டது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


 

 

கூட்டத்திற்கு ராஜூ ரஞ்சன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் AV சாமி, பூபதி பாலா, ராஜூ முருகன், அஷ்ரப் அலி, அறந்தை செந்தில்குமார், பாலாஜி, மனோ கௌதம், வாளாடி ராஜ்குமார், மதன்குமார், சௌகத் அலிகான், செந்தில்குமார் தங்கவேலு, ரஞ்சித்குமார் ராஜ்குமார், இளையராஜா, பிரபு மற்றும் மகளீர் அணி சார்பாகா திருமதி சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.