Bharat Scout Movement Diamond Jubilee

அமைச்சர்- தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத் தலைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள Global Village அரங்கத்தைப் பார்வையிட்டார்.

Advertisment

வளமான உலகை உருவாக்குவதற்கான 17 இலக்குகளை ஐ.நா.சபை வழங்கியுள்ளது. அந்த இலக்குகளைத் தமிழ்நாட்டில் அடைவதற்கான திட்டங்களை அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்களையும், ஐ.நா.சபையின் இலக்குகளையும் மாணவச் செல்வங்களுக்கு விவரிக்கும் நோக்கில் Global Village அரங்கத்தை #DiamondJubileeJamboree2025 நிகழ்வில் அமைத்துள்ளார்கள்.

Advertisment

Bharat Scout Movement Diamond Jubilee

ஆஸ்ட்ரோ(Astro) எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோவின் அன்பான வரவேற்பை ஏற்று இந்த அரங்கத்தை பார்வையற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இங்கு நடத்தப்பட்ட பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்ற சாரணர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.

Bharat Scout Movement Diamond Jubilee

ராஜஸ்தான் சாரண சாரணியர் அவர்களது கலாச்சாரப்படி வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் சாரண சாரணியர் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. சவுதி அரேபியா நேபாளம் இலங்கை மாலேசியா நாடுகளைச் சேர்ந்த சாரண சாரணியருடன் அமர்ந்து உணவு அருந்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கேம்பயர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சாரண சாரணியர் நடன நாட்டிய நிகழ்வுகளை கண்டு களித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆணையர் முனைவர் அறிவொளி, முனைவர் நரேஷ், நாகராஜ்முருகன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

Advertisment