Advertisment

பாரதமாதா கோவில் பூட்டு உடைப்பு... பாஜகவினர் கைது!

 Bharat Mata temple lock breaking... BJP members arrested!

Advertisment

தர்மபுரியில் பாரதமாதா கோவில் பூட்டை உடைத்த பாஜகவினர் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பாஜக சார்பில் 'அமுது திருவிழா' கொண்டாடப்பட்டுவருகிறது. கடந்த 11ஆம் தேதி தர்மபுரி மாவட்ட பாஜக சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரையானது பழைய பாப்பாரப்பட்டியில் இருந்து தொடங்கி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபம் வரை நடைபெற்றது. இதனை முன்னாள் எம்.பி இராமலிங்கம் துவங்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள பாரதமாதா நினைவு ஆலயத்திற்கு பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் பாஜகவினர் சென்று கல்லை கொண்டுபூட்டை உடைத்து சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து பூட்டை உடைத்தது தொடர்பாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

dharmapuri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe