Bharat Bandh in support of farmers ... Central Government worker Unions Participation ...!

இந்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தலை நகரான டெல்லியில் முற்றுகையிட்டு கடந்த 12 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த போராட்டத்தின்போது மத்திய அரசுஉடனான ஐந்துகட்டபேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதிலும் டிசம்பர் 8ஆம் தேதி ஒரு நாள் பாரத் பந்த் நடைபெறுவதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தது.

Advertisment

அதன்படி இன்று இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த பந்தில் பங்கேற்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலை அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களுடைய ஒத்துழைப்பைப் பதிவுசெய்தனர். மேலும் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள தொழிற்சங்கங்களும் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களுடைய ஒத்துழைப்பைப் பதிவு செய்துள்ளனர்.