/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sarathkumar_2.jpg)
தன்னுடைய நண்பர் மதிப்பிரகாசம் பேத்தியின் பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்றிரவு விருதுநகருக்கு வந்தார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். அவரை செய்தியாளர்கள் சந்தித்து, ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை நடைபெறவிருக்கும் கடையடைப்பு போராட்டத்துக்கு தங்கள் கட்சி ஆதரவளிக்குமா?’ என்று கேட்டனர். அதற்கு சரத்குமார், “எந்த ஒரு மக்கள் பிரச்சனைக்கு நிச்சயம் ஆதரவு தருவோம். ஆனால், கட்சி நடத்தும் பந்த்துக்கு ஆதரவு தரமாட்டோம்.” என்றார்.
அடுத்த சில விநாடிகளிலேயே, சரத்குமாரின் நிலைப்பாடும் பேட்டியும் ‘ஸ்க்ரோலிங்’ ஆக சில சேனல்களில் ஓட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் அவரைத் தொடர்புகொண்டு “மக்கள் பிரச்சனைக்காகத்தானே இந்த பந்த் நடத்தப்படுகிறது?” என்று கூறியிருக்கிறார். உடனே, சரத்குமார் தரப்பில் விருதுநகர் மீடியாக்களிடம் பேசிய அக்கட்சியின் நிர்வாகி “தலைவரோடு திருநாவுக்கரசர் பேசியிருக்கிறார். அதனால், ஆதரவளிப்பதாக இருக்கிறோம்.” என்று கூற, ‘அதை சரத்குமாரே சொன்னால் நன்றாக இருக்கும்’ என்று மீடியாக்கள் வெளியே காத்திருந்தனர். மதிப்பிரகாசம் வீட்டிற்குள் சென்று சரத்குமாரிடம் கலந்தாலோசித்துவிட்டு திரும்பிய அந்த நிர்வாகி “தலைவர் மீண்டும் மீடியாவை சந்திக்க விரும்பவில்லை. பந்த்துக்கு ஆதரவு என்பதை அறிக்கையாகவே மீடியா அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவோம்.” என்று கூறி சமாளித்திருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)