/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bagath-singh_0.jpg)
சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பின் தலைவர்களில் ஒருவரானபகத்சிங் என அழைக்கப்பட்டவரின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி ஏழாம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் பங்கா என்ற கிராமத்தில் ஒரு சீக்கிய குடும்பத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் பகத்சிங்.
இவர் விடுதலைப் போராட்டத்திற்காக தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர். இவர் அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெற முடியாது ஆயுதம் வாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெற முடியும் என்ற கொள்கையோடு இந்துஸ்தான் குடியரசு கழகம் எனும் அமைப்பில் இணைந்தார். மேலும் சென்ட்ரல் அசம்பலி ஆலையில் வெடி குண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் இன்குலாப் சிந்தாபாத் என்று முழக்கமிட்டு தானே சரணடைந்தவர். பின்னர் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவல் அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
பகத்சிங் ஆங்கிலேய அரசின் 24வது அகவையில் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். மாபெரும் சுதந்திர போராட்ட தியாகி என்று பலராலும் அழைக்கப்படும் பகத்சிங் 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு சம உரிமை பெறுவதற்காக உண்ணாவிரதம் இருந்ததில் அவருக்கு மிகுந்த பங்குண்டு என்பதால் இவர் பெரும் அளவில் மக்களிடம் பிரபலமாகினார். இன்று இவரின் பிறந்தநாளை இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடி அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)