Advertisment

காதலில் துரோகம்!  ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு நீதி! -ஒரு காதலனின் மரண வாக்குமூலம்!

sand

‘நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே! உயிரைவிடும் சிந்துஜாக்கள்!’ என்னும் தலைப்பில், மதுரை மாவட்டம் – திருதாவூரைச் சேர்ந்த சிந்துஜா, காதலன் ராம்குமார் செய்த துரோகத்தால் தற்கொலை செய்துகொண்டது குறித்து, நேற்று கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

Advertisment

“பெண்களிலும் காதலனுக்குத் துரோகம் இழைப்பவர்கள் உண்டு. தன்னுடைய மரண வாக்குமூலத்தைப் பதிவு செய்து விஷம் அருந்தி உயிரை விட்டிருக்கிறார் ஒரு இளைஞர்.” என, வாட்ஸப்பில் வீடியோ ஒன்றை இன்று நமது இணையதளத்துக்கு அனுப்பியிருக்கிறார் ஒரு வாசகர்.

Advertisment

‘யார் அந்த இளைஞர்? அவரை ஏமாற்றிய காதலி யார்?’ என்ற கேள்விக்கு அந்த வீடியோவே பதிலளிக்கிறது.

kalaignar

திருச்சி மாவட்டம் – மணப்பாறை வட்டம் – காரைப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர், புதுக்கோட்டை மாவட்டம் – சடையம்பட்டியைச் சேர்ந்த யுவராணியைக் கடந்த 4 வருடங்களாகக் காதலித்து வந்தார். யுவராணி வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பும் இல்லை. அதனால், யுவராணியின் வீட்டுக்கே போய் வந்தார் சசிகுமார். திடீரென்று, யுவராணிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்தனர். அவளும் கடந்த ஒரு மாதமாக சசிகுமாருடன் பேசுவதை நிறுத்தினாள். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சசிகுமார், “நான் இப்ப சாகப் போறேன். இதுதான் உண்மை!” என்று தனது மரண வாக்குமூலத்தைப் பதிவு செய்து, வாட்ஸ்-ஆப்பில் பலருக்கும் அனுப்பிவிட்டு, சொன்னது போலவே, மோனோசில் என்ற பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

kalaignar

அவரது குமுறல் இதுதான் – “ஒரு ஆண், ஒரு பெண்ணை மோசம் பண்ணியது தெரிந்தால், அவனுக்கே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனா, ஒரு பெண், ஒரு ஆணை மோசம் செய்துவிட்டால், யாருமே அதை ஒரு புகாராக எடுக்க மாட்டேங்கிறாங்க. அதனால்தான் நான் தற்கொலை செய்துகொள்ளப் போறேன். சாகப் போறேன். இது என்னுடைய மரண வாக்குமூலம். இனிமேலாவது, ஒரு ஆணுக்கோ, ஒரு பெண்ணுக்கோ இதுபோன்ற ஒரு நிலைமை வரக்கூடாது. ஆணோ, பெண்ணோ, உண்மையா லவ் பண்ணுறதா இருந்தா லவ் பண்ணுங்க. காதலில் ஒரு பெண் காதலனுக்குத் துரோகம் செய்தால், அவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.” என்று உடைந்த குரலில் பேசியிருக்கிறார் சசிகுமார்.

sy

காதலனால் ஏமாற்றப்பட்ட சிந்துஜாவும், காதலியால் ஏமாற்றப்பட்ட சசிகுமாரும், துரோகத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட சாட்சிகள் ஆகிவிட்டனர்.

காதலில் ‘பிரேக்-அப்’ என்பது சகஜமாகிவிட்ட காலம் இது. அதனால், ராம்குமார், யுவராணி போன்றவர்களுக்கு காதல் என்பது, சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கும் ஒரு விளையாட்டு ஆகிப்போனது. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உறவு அல்லவா காதல்? இந்த உன்னதக் காதல் உணர்வுதான், சிந்துஜா, சசிகுமார் போன்றவர்களின் தற்கொலைக்கு காரணமாகிவிட்டது.

Sasikumar yuvarani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe