Advertisment

லாரி மீது கார் மோதி கோர விபத்து; 3 பேர் பலியான சோகம்

bengaluru chennai highway hosur lorry car incident

லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கோனேரிப்பள்ளி என்ற பகுதியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பின்னால் வந்த கார் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் வந்த 5 பேரில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

Advertisment

சிக்னல் கொடுக்காமல் லாரி திடீரென சாலையோரம் திரும்பியதால் பின்னால் வந்த கார் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் தப்பி ஓடியதாகவும் சொல்லப்படுகிறது. விபத்தில் சிக்கிய இளைஞர்கள் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனசூளகிரி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

car highways Hosur Krishnagiri lorry police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe