Beneficiaries of the 100 day work program who staged a sit-in in front of the Union Office ...!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது சிறுவங்கூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் இருக்கும் ரோடு மாமந்தூர் பகுதியைச் சேர்ந்த, 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்குக் கூலி வழங்குவது இல்லை என்று கூறி, பயனாளிகள் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

Advertisment

போராட்டத்தில் ஈடுபட்ட பயனாளிகள் நம்மிடம் கூறும்போது, "நாங்கள் பல மாதங்களாக 100 நாட்கள் வேலை செய்து வந்துள்ளோம். அதற்கான கூலிவழங்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் அதே ஊராட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் மற்றும் அவரது மனைவிதான். அவர்கள் மோசடி செய்து, வேலை செய்த நாட்களின் எண்ணிக்கை விபரத்தினை மறைப்பதும்,அதற்காகக் கூலியைக் குறைப்பது அல்லது கொடுக்காமல் ஏமாற்றுவது என மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

பணி செய்த நாட்களுக்குக் கூலி கேட்டுப் பலமுறை நேரடியாகச் சென்று முறையிட்டும்கூட கூலி வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கிறோம்"என்றார்கள்

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி அலுவலர்கள், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பயனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் வேலை செய்த நாட்களுக்கான பணம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 நாள் வேலை திட்டப் பயனாளிகள், தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Advertisment