Skip to main content

நடு இரவில் காதலி வீட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட காதலன்கள்!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
ன்

           குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரை சோ்ந்தவா் பவானி. இவருடைய கணவா் நாகா்கோவிலில் ஒரு ஏ.டி.எம் சென்டரில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். பவானிக்கு இளம் வயதுடைய இரண்டு வாலிபா்கள் கள்ளக்காதலா்களாக இருந்து வருகிறார்கள். இந்த இருவருடைய வீடு பவானியின் வீட்டில் இருந்து 15 கி.மீ.தூரம் கொண்ட நாகா்கோவிலில் உள்ளது. 


           கணவா் இரவு வேலைக்கு சென்றதும் பவானி தினம் ஒருவரை உல்லாசம் அனுபவிக்க  அழைப்பாராம். அப்போது அந்த கள்ள காதலா்கள் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் அங்கு சென்று விடுவார்கள். இப்படி தினம் ஓருவரை அழைத்து பவானி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

 

            இந்தநிலையில் நேற்று இரவு ஓருத்தரை வழக்கம் போல் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார் பவானி. அதன்பிறகு கொஞ்சம் நேரத்தில் தகவல் எதுவும் சொல்லாமல் அடுத்த கள்ளகாதலனும் அங்கு வழக்கம் போல் சென்று சிக்னல் கொடுத்துள்ளார். 


            இதனையடுத்து அரைகுறை ஆடையுடன் வெளியே வந்த பவானியை கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த கள்ளக்காதலன் சந்தேகமடைந்து  உள்ளே சென்று பார்க்கும் போது அங்கு இன்னொரு கள்ளகாதலன் அரைகுறை ஆடையுடன்  இருந்ததை கண்டு ஆத்திரமடைந்த இருவரும் வீட்டுக்குள்ளே கட்டிபுரண்டு சண்டை போட்டனா்.


             அப்போது ஒரு கள்ளகாதலனை இன்னொரு கள்ளகாதலன் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளான். நடு இரவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லீரலில் இருந்து அகற்றப்பட்ட 'சமையல் கத்தி'... எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

Liver - Delhi - AIIMS - Kitchen -Knife - Doctors

 

புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இளைஞர் ஒருவருக்கு கல்லீரலில் இருந்த 20 செமீ நீளமுள்ள கத்தி அகற்றப்பட்டிருப்பது பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த ஜூலை 12 அன்று வயிற்று வலி மற்றும் பசியின்மை காரணமாக எய்ம்ஸ் மருந்துவமனையில் 28 வயதான இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக எக்ஸ்-ரே செய்யப்பட்டு வயிற்றுப் பகுதி பரிசோதிக்கப்பட்டது. அப்போது கல்லீரலில் சுமார் 20 செ.மீ நீளமுள்ள கத்தி இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் தாஸ் கூறுகையில் "இந்த அறுவைசிகிச்சை மிக நுட்பமாகச் செய்யப்பட்டது. சிறு பிழையானாலும் அந்த இளைஞன் உயிர்பிழைப்பது கடினமாகியிருக்கும். ஏனெனில் அந்தக் கத்தியானது பித்தப்பைக்கு மிக அருகில் இருந்தது. எனவே அந்தக் கத்தியைக் குடல் சுவர் வழியாகத் துளையிட்டு அகற்றினோம். அந்த இளைஞன் கத்தியை விழுங்கி ஒன்றரை மாதம் இயல்பாக இருந்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. இப்படி ஒரு சம்பவத்தைப் பார்ப்பது இதுதான் முதல்முறை. அவருக்குப் போதைப்பொருள் பழக்கம் இருந்துள்ளது. அதனால் போதைப்பொருள் கிடைக்காத விரக்தியில் கத்தியை விழுங்கி தண்ணீரைக் குடித்துள்ளார். எனவே அவருக்குத் தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

அதிமுக பிரமுகருக்கு வெட்டு; வேதாரண்யத்தில் பரபரப்பு

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

தாணிக்கோட்டகம் அதிமுகவைச்சேர்ந்த காளிதாசன் என்பவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் பலத்தக்காயத்தோடு சரிந்து விழுந்தவரை தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

அ

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு காவல் சரகம் தாணிக்கோட்டகத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவர் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் ஆதரவாளராக இருந்துவருகிறார். அந்த பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளைகளுக்கு எதிராக பேசிவருபவர். மானங்கொண்டான் ஏரியை தூர்வாருகிறோம் என்கிற பெயரில் நிதி ஒதுக்கி, அந்த நிதியையும், ஏரியில் உள்ள மணலையும் கொள்ளையடிப்பதாக சிட்டிங் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மணல் கடத்தல்காரர்களையும் தொடர்ந்து கண்டித்து குடைச்சல் கொடுத்துவந்தார். அதோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கும் விசாரணையில் இருந்துவருகிறது.

 

இந்தநிலையில் தாணிக்கோட்டகம் சின்ன தேவன் காட்டிலிருந்து குலாலர் காட்டிற்குச் செல்லும்  வழியில் காளிதாஸனை இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் அரிவாளால் தலை மற்றும் தோள்பட்டையில்  வெட்டியதில் பலத்த காயத்தோடு சரிந்தார். படுகாயத்தோடு கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

 

இதுகுறித்து வாய்மேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.  காளிதாசனுக்கு பலதரப்பிலும் எதிர்ப்புகள் இருந்துள்ளது. வெட்டியவர்கள் மணல்குவாரி அதிபர்களா, அல்லது அதிமுகவில் உள்ள எதிர்ப்பாளர்களா, அல்லது சொந்த பகையா என விசாரித்து வருகின்றனர்.