ன்

Advertisment

குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரை சோ்ந்தவா் பவானி. இவருடைய கணவா் நாகா்கோவிலில் ஒரு ஏ.டி.எம் சென்டரில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். பவானிக்கு இளம் வயதுடைய இரண்டு வாலிபா்கள் கள்ளக்காதலா்களாக இருந்து வருகிறார்கள். இந்த இருவருடைய வீடு பவானியின் வீட்டில் இருந்து 15 கி.மீ.தூரம் கொண்ட நாகா்கோவிலில் உள்ளது.

கணவா் இரவு வேலைக்கு சென்றதும் பவானி தினம் ஒருவரை உல்லாசம் அனுபவிக்க அழைப்பாராம். அப்போது அந்த கள்ள காதலா்கள் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் அங்கு சென்று விடுவார்கள். இப்படி தினம் ஓருவரை அழைத்து பவானி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவு ஓருத்தரை வழக்கம் போல் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார் பவானி. அதன்பிறகு கொஞ்சம் நேரத்தில் தகவல் எதுவும் சொல்லாமல் அடுத்த கள்ளகாதலனும் அங்கு வழக்கம் போல் சென்று சிக்னல் கொடுத்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து அரைகுறை ஆடையுடன் வெளியே வந்த பவானியை கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த கள்ளக்காதலன் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்க்கும் போது அங்கு இன்னொரு கள்ளகாதலன் அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டு ஆத்திரமடைந்த இருவரும் வீட்டுக்குள்ளே கட்டிபுரண்டு சண்டை போட்டனா்.

அப்போது ஒரு கள்ளகாதலனை இன்னொரு கள்ளகாதலன் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளான். நடு இரவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.