Skip to main content

யானைக்குட்டியை பிரிந்திருந்த பெள்ளி; ஓராண்டுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

belli who shed tears after seeing the little doll after a year
கோப்புக்காட்சி

 

உலக அளவில் சினிமா துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதை சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் பெற்றது. இது தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த பொம்மன், பெள்ளி என்ற இரு பழங்குடிகளைப் பற்றிய கதை.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஓசூர் வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்த குட்டியானை பொம்மி முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்துவரப்பட்டது. இந்த குட்டியானைக்கு பழங்குடி இனத்தை சேர்ந்த பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பாகனாக இருந்து தங்களது பிள்ளை போன்று வளர்த்து வந்தனர். குட்டி யானைக்கும் தம்பதியினருக்கும் இடையே ஏற்பட்ட பாசப்பிணைப்பினை 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற பெயரில் ஊட்டியைப் பூர்விகமாகக் கொண்ட ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி இயக்கியிருந்தார். இந்தப் படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றிருந்த நிலையில், இறுதியாக ஆஸ்கர் விருதையும் வென்றது.   

 

belli who shed tears after seeing the little doll after a year

 

இந்த நிலையில், இந்த ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்ற பெள்ளி, தான் வளர்த்த பொம்மி யானையை ஓராண்டிற்குப் பிறகு நேரில் சென்று தொட்டுப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார். ஓராண்டுக்கு முன்பு வரை குட்டியானை பொம்மியை பொம்மன், பெள்ளி தம்பதியினர் வளர்த்து வந்த நிலையில், நிர்வாகம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வேறு யானையின் பாகனாக பொம்மன் மாற்றப்பட்டார். மேலும், தற்காலிகமாக வேலை பார்த்து வந்த பெள்ளியும் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வானதால் பிரபலமான பெள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது. இந்த நிலையில், குட்டியானை பொம்மியை நேரில் சந்தித்து முத்தமிட்டு பெள்ளி ஆனந்தக் கண்ணீர் வடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாய் இருந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

Next Story

பெண் யானைக்கு உடல்நலக் குறைவு; பரிதவிக்கும் குட்டி!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Female elephant ill health Poor kid

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டுள்ளது பார்ப்போர் மனதையும் கலங்க செய்கிறது.