
தர்மபுரி அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆறு வயது சிறுவன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவருக்கு மதியரசு என்ற ஆறு வயது மகன் இருந்தார். கடந்த 16 ஆம் தேதி சிறுவன் மதியரசுவை காணாததால் பெற்றோர் பல இடங்களில் தேடினர். தொடர்ந்து தேடியும் சிறுவன் கிடைக்காததால் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவருடைய மகன் பிரகாஷ் (19) என்பவரைச் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், பயன்பாட்டில் இல்லாத நீர்த்தேக்க தொட்டியில் வைத்துமதியரசுவை இரண்டு நாட்கள் பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்தது தெரியவந்துபோலீசாருக்குஅதிர்ச்சியைத்தந்துள்ளது. சிறுவன் நீர்த்தேக்க தொட்டியில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும் இந்தக் கொலையில்மேலும் பலருக்குத்தொடர்பு இருப்பதாகவும் அவர்களைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரம் சிறுவன் காணாமல் போனது கடந்த 16 ஆம் தேதி அமாவாசை தினம் என்பதால் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us