/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4914.jpg)
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் நவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார், காவலர் ஸ்ரீதர் ஆகியோர் நேற்று சோழமாதேவி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களைப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஜெயில்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன்(21), மணப்பாறையைச் சேர்ந்த பிரபு(23) மற்றும் மதுரை தோப்புக்காலனியைச் சேர்ந்த வீரையா(26) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களைச் சோதனை செய்தபோது, அவர்களிடம் அரிவாள், சுத்தியல், இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்த காவலர்கள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஜெயசீலன்(21), பிரபு(23) மற்றும் வீரையா(26) ஆகிய மூவரையும் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில் சேலம் காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விபின் ஜோஸ்(24), மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(18), உள்ளிட்டோரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)