ADVERTISEMENT

பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

11:15 PM Sep 04, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

கோப்புப்படம்

ADVERTISEMENT

தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை கல்வியியல் (B.Ed) பட்டப்படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பிற்கான (B.Ed) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும். அட்டவணைப் பிரிவு மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாகவும் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் The Director, Directorate of Collegiate Education, Chennai - 15" என்ற பெயரில் 01.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கிய நாள் செப்டம்பர் 1 ஆகும். இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் செப்டம்பர் 11 ஆம் தேதி ஆகும்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT