Because the DMK chairman was asked to write his name on the bus stand.. the names of others were washed out

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம், குன்னூர் ஊராட்சி முதுவளர்குடி கிராமத்தில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதியின் நிதியில், ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு கடந்த மாதம்(2019-2020) திறக்கப்பட்டது.

Advertisment

திறப்பு விழா நடந்த நிழற்குடையில், சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி, ஒன்றியக் கவுன்சிலர் ராஜேஸ்வரி நரேந்திரஜோதி, ஊராட்சிமன்றத் தலைவர் காளிமுத்து, துணைத் தலைவர் சுப்பு ஆகியோரின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஒன்றியக்குழுத் தலைவர் தி.மு.க உமாதேவி பெயர் இல்லை. ஒன்றிக்குழு உறுப்பினர் பெயர் எழுதப்பட்ட நிலையில், தலைவர் பெயர் மட்டும் ஏன் விடுபட்டது? தலைவர் உமாதேவி தி.மு.க என்பதால் பெயரை எழுதவில்லையா? அல்லது பட்டியல் இனத்தவர் என்பதாலா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisment

தீண்டாமையாக நினைத்து சேர்மன் பெயர் இடம் பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியினர், சுவரொட்டிகள் ஒட்டியதுடன், இதற்கு எதிராக 23ஆம் தேதி போராட்டம் நடத்தவும் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால்,பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Because the DMK chairman was asked to write his name on the bus stand.. the names of others were washed out

இது குறித்து சேர்மன் உமாதேவி (திமுக) கூறும் போது, அது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட நிழற்குடை என்பதால் என் பெயர் எழுதாமல் விட்டிருக்கலாம் என்றார்.

Ad

மேலும் செய்தியாளர்கள், தீண்டாமை என்று சுவரொட்டிகள் ஒட்டி இருக்கிறார்களே என்று கேள்வி எழுப்பியபோது. அதற்கு அவர், “என்ன நினைத்து பெயர் எழுதாமல் விட்டார்களோ. ஆனால் நான் அதைப்பற்றி நினைக்கவில்லை. எம்.எல்.ஏ நிதி என்பதால் விடுபட்டுள்ளதாகவே நினைக்கிறேன்” என்றார்.

இந்த செய்தியைக் கடந்த 3ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் வெளியிட்டிருந்தோம். நக்கீரன் இணைய செய்தி வெளியான நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு நிழற்குடையில் சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி பெயரைத் தவிர மற்ற அனைவரின் பெயர்களையும் பெயிண்ட் அடித்து அழித்துள்ளனர். இப்போதும்கூட மற்றவர்கள் பெயர் இருந்தால் சேர்மன் பெயரும் எழுதப்பட வேண்டும் என்பதால் தான் மற்றவர்கள் பெயர்களை அழித்துள்ளனர் என்கிறார்கள்.