Advertisment

அழகு நிலையம் நடத்திய பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது...

Tindivanam

Advertisment

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச்சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ஆதிலட்சுமிவயது 27. திண்டிவனம் நகரில் அழகு நிலையம் வைத்துள்ளார். இவர்களுக்கு 10 வயதில் மகள் ஒருவர் உள்ளார். கணவர் பழனிக்கும் ஆதிலட்சுமிக்கும் குடும்பப் பிரச்சனை காரணமாக சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு இப்போது தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

சஞ்சீவிராயன் பேட்டையைச் சேர்ந்த ராஜமூர்த்தி மகன் விக்கி என்கிற கணேஷ் (வயது 27). இவருக்கும் ஆதிலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணேஷ் ராஜலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த அக்டோபர் மாதம் முதல் சென்னையில் ரகசியமாக தனியாகக் குடும்பம் நடத்தியுள்ளார். சில மாதங்கள் கழித்து கணேஷ், ஆதிலட்சுமியிடம் டிராவல்ஸ் கம்பெனி நடத்தலாம் என்று கூறி அவரிடமிருந்து 12 சவரன் நகையை வாங்கியுள்ளார். பிறகு திண்டிவனம் அழைத்து வந்து திருவள்ளுவர் நகரில் வீடு பார்த்து அங்கு இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அப்போது மேலும் இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார் ஆதிலட்சுமி.

இதனிடையே ஆதிலட்சுமியிடம் பேசுவதையும் அவரை சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார் கணேஷ். ஏன் இப்படிச் செய்கிறார் கணேஷ் என,ஆதிலட்சுமி விசாரித்ததில் கணேஷ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது ஆதி லட்சுமிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது நகை, பணத்தைப் பறித்துக் கொண்டு ஏமாற்றி வருவதாகவும் வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பதைத் தட்டிக் கேட்ட காரணத்தால் கணேஷ் மற்றும் அவரது தந்தை ராஜமூர்த்தி, தாயார் பெரியநாயகி, கணேஷின் தம்பிகள் முத்து, விஷ்ணுபாபு ஆகியோர் சேர்ந்து தன்னைத் திட்டி மிரட்டியதாகவும் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஆதிலட்சுமி.

Advertisment

இந்தப் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து கணேஷைகைது செய்துள்ளார்.

arrested complaint Tindivanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe