beaten on K.K.S.S.R.Ramachandran family

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். இவரது மகன் ரமேஷ் மற்றும் பேரன் இருவரும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் படம் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போதுஅவர்களுக்குப் பின்பக்க இருக்கையில் இருந்தவர்கள் ஆபாச வார்த்தைகள் கூறி கத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சரின் மகனும், பேரனும் கேட்டபோது பின் இருக்கையில் இருந்தவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து பின் இருக்கையிலிருந்த 6 பேர் அமைச்சரின் மகனையும், பேரனையும் தாக்கியுள்ளனர். அதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சரின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் இருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள தேனாம்பேட்டை போலீசார், திரையரங்கிற்குச் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் 6 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.