திருச்சி கருமண்டபம் குளத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கனி. இவரது மனைவி சபிதா (50). திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(48). இவர்கள் இரண்டு பேரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். மேலும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் அண்ணாதுரை சபிதாவிடம் ரூபாய் 4 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இந்தக் கொடுக்கல் வாங்கலில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாதுரை நேராக சபிதா வீட்டுக்குச் சென்று அவரை ஆபாச வார்த்தையால் தாக்கிவிட்டு கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து சபிதா கொடுத்த புகாரின் பேரில் அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர்.