Advertisment

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

beaten on college student who spoke to girl student

Advertisment

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத்தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

girl police student
இதையும் படியுங்கள்
Subscribe