இறைச்சிக் கடையில் கடன் தர மறுத்த உரிமையாளருக்கு  அரிவாள் வெட்டு!

beaten on butcher shop owner who refused to give loan

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள லக்கி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காதர். இவரது மனைவி ஷகீரா. இருவரும் சேர்ந்து அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். அந்த இறைச்சி கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் இறைச்சியைக் கடனாக கேட்டதாக கூறப்படுகிறது. இறைச்சியைக் கடனாக கொடுக்க முடியாது எனக் காதர் கூறியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த ராஜா, தான்மறைத்து வைத்திருந்த அரிவாளால் காதர் மற்றும் அவரது மனைவி ஷகீராவை வெட்டியுள்ளார்.

beaten on butcher shop owner who refused to give loan

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதியில் உள்ளபொதுமக்கள் மீட்டு புதுபட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,அவர்களைமேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. அதனைத்தொடர்ந்து இறைச்சிக் கடைக்கார தம்பதியினரை வெட்டிய ராஜா என்பவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறைச்சி கடனாக தர மறுத்ததால் இறைச்சிக்கடை தம்பதியினரை அறிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

kallakurichi loan police
இதையும் படியுங்கள்
Subscribe