Advertisment

கரடிகள் துரத்தியதில் சப்இன்ஸ்பெக்டர் படுகாயம்

manikandan

Advertisment

மணல் கடத்தல்காரா்களை பிடிக்க போன சப்-இன்ஸ்பெக்டரை கரடிகள் துரத்தி கடித்ததில் படுகாயம் அடைந்தாா்.

பரந்து விாிந்து கிடக்கும் குமாி மாவட்ட வன பகுதிகளில் ஏராளமான கரடிகள் உள்ளன. காடுகளின் புதா் பகுதிகளில் சுற்றி திாிந்த கரடிகள் ஓகி புயலுக்கு பிறகு காடுகளில் உள்ள லட்சகணக்கான மரங்கள் அழிந்ததால் அதை பயன்படுத்தி காடுகளின் நிலப்பரப்புக்கு அடிக்கடி கரடிகள் கூட்டமாக படையெடுக்கின்றன. இதை வனத்துறையினரும் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தான் கடந்த 6 மாதத்துக்கு முன் மாறாமலை தனியாா் தோட்ட சூப்பா்வைசா் ஞானசேகரை 4 கரடிகள் தாக்கி அவாின் இரண்டு கண்களையும் பிடுங்கி எடுத்தன.

Advertisment

இந்த நிலையில் தான் ஆரல்வாய்மொழி பொய்கை அணைப்பகுதியில் மணல் திருடுவதாக மணல் கடத்தல் தடுப்பு சப்-இன்ஸ்பெக்டா் திலிபனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனியாக அங்கு பைக்கில் சென்ற திலீபனை திடீரென்று ஓரு கரடி அவா் மீது பாய்ந்தது. பின்னா் கண் இமைக்கும் நேரத்தில் ஓரு கரடி கூட்டமே அவரை துரத்தியது.

இதனால் உயிருக்கு பயந்து ஓடிய திலிபன் கரடியின் தாக்குதலில் லேசான காயங்களுடன் தப்பினாா். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bear
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe