
சாக்லெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் புகுந்து சாக்லெட்டுகளை கரடி ஒன்று ருசிப் பார்த்து சென்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, அருகில் இருந்த ஹோம் மேட் சாக்லெட் தொழிற்சாலையில் சுவர் ஏறிக் குதித்து புகுந்தது. அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த சாக்லெட்டுகளை சாப்பிட்டு விட்டு மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டது. தொழிற்சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவான நிலையில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, கரடியைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விடுமாறு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.