Skip to main content

கரடி தாக்கியதில் இரண்டு கண்களையும் இழந்த மேலாளா்

Published on 12/06/2018 | Edited on 12/06/2018

குமரி மாவட்டம் கீரிப்பாறை மலைப்பகுதியில் கரடி கடித்து தனியார் தோட்டம் மேலாளா் இரண்டு கண்களையும் இழந்தார்.
 

கீரிப்பாறையை அடுத்த மாறாமலையில் தனியாருக்கு சொந்தமான கிராம்பு தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. இந்த தோட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சோ்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் சீசன் காலங்கள் மற்றும் அங்கே நிரந்தரமாக தங்கியிருந்தும் வேலை செய்து வருகின்றனா். இதில் ஞானசேகரன் என்பவா் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு அங்கே தங்கிருந்து ஓரு தோட்டத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இன்று காலை 6 மணிக்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்களை கண்காணிக்க தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தோட்டத்துக்குள் நிற்கும் மங்கூஸ் மரங்களில் இருந்து கீழே விழும் மங்கூஸ் பழங்களை சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்த 6 கரடிகள் ஞானசேகரை துரத்தியது.
 

The bare bite and private garden management lost two eyes




 
இதனால் உயிருக்கு பயந்து ஞானசேகரன் கால்தடுமாறி கீழே விழுந்தார். இதில் இரண்டு கரடிகள் கடித்து குதறியதில் ஞானசேகரனின் இரண்டு கண்களும் காயமடைந்து வெளியே தொங்கியது. உடனே மற்ற தொழிலாளிகள் ஓடி வந்து கரடியை துரத்தி விட்டு ஞானசேகரனை காப்பாற்றி ஆசாரிப்பள்ளம் அரசு  மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிகிட்சைக்காக சோ்த்துள்ளனா். இந்த சம்பவத்தால் அங்குள்ள தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதபூஜை எதிரொலி; பூக்கள் விலை கடும் உயர்வு

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

Ayudapuja Echo; The price of flowers has skyrocketed

 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை காரணமாக மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.

 

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வடைந்துள்ளது. குமரி தோவாளை பகுதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு மலர் சந்தை நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாட்டின் ராயக்கோட்டை, மதுரை, ஓசூர், திண்டுக்கல் என பல்வேறு வெளியூர் பகுதிகளில் இருந்தும், ஆரல்வாய்மொழி, குமாரபுரம், தோவாளை உள்ளிட்ட உள்ளூர்ப் பகுதிகளில் இருந்தும் சுமார் 200 டன் பூக்கள் இந்த சிறப்பு மலர் சந்தைக்கு வந்துள்ளது.

 

ஒரு கிலோ பிச்சிப்பூ 800 ரூபாயில் இருந்து 1100 ரூபாய்க்கும், மல்லிகைப்பூ கிலோ 1,000 ரூபாயிலிருந்து 1500 ரூபாய்க்கும், ரோஜா பூ ரூபாய் 250 லிருந்து 300 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாயில் இருந்து 500 ரூபாய்க்கும், சம்பங்கி 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.

 

 

Next Story

சிறுத்தையைத் தொடர்ந்து கரடி நடமாட்டம்; பக்தர்கள் அதிர்ச்சி

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

A bear follows a leopard Devotees are shocked

 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த லட்சிதா என்ற ஆறு வயது சிறுமி பெற்றோருடன் கடந்த 11 ஆம் தேதி இரவு திருப்பதி மலைக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போனார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. தொடர் தேடுதலுக்குப் பிறகு 12 ஆம் தேதி காலை அலிபிரி வழி நடைபாதையில் அடர் வனப்பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

 

மேலும் சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததால் கரடி தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இறுதியில் சிறுமி சிறுத்தையால் கொல்லப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டது. அதே சமயம் திருப்பதி நடைபாதை அருகே மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்திருந்த நிலையில் இரண்டாவதாக ஒரு சிறுத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிடிபட்டது.

 

இதனைத் தொடர்ந்து திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இதையொட்டி பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பிற்காகக் கைத்தடி வழங்கும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கி இருந்தது. மேலும் திருப்பதி மலைப் பாதையில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பாத யாத்திரை செல்ல அனுமதி அளித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.

 

இந்நிலையில் திருப்பதி அலிபிரி நடைபாதையில் உள்ள நரசிம்மர் கோவில் பகுதியில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற பக்தர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதே சமயம் அலிபிரி மலைப்பகுதியில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் பாதைகளில் சிறுத்தை, கரடி, முள்ளம் பன்றி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பது வனத்துறையினர் பொருத்தி இருக்கும் கேமராக்களில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.