Skip to main content

மீண்டும் ஊருக்குள் புகுந்த ஒற்றை கரடி; அச்சத்தில் பெத்தான்பிள்ளை கிராமம்

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

 A bear again; Bethanpillai village in fear

 

தென்காசி மாவட்டம் கருத்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்டமணி. இவர் கடந்த 6 ஆம் தேதி சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை என்ற கிராமத்திற்கு மசாலா பொருட்களை வியாபாரத்திற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார். வனப்பகுதியின் நடுவிலான சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே வந்த ஒற்றை கரடி இருசக்கர வாகனத்தை கீழே தள்ளியதோடு வியாபாரி வைகுண்டமணியை கடித்துக் குதறியது.

 

அப்போது அந்தப் பகுதிக்கு வந்த கிராம மக்கள் கரடியை விரட்டி விட முயன்ற நிலையில், நாகேந்திரன், சைலப்பன் என்ற இருவரையும் அந்த கரடி கடித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கரடி தாக்கியதில் படுகாயமடைந்த மசாலா வியாபாரி வைகுண்டமணி, நாகேந்திரன், சைலேந்திரன் ஆகிய மூன்று பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

 A bear again; Bethanpillai village in fear

 

அதைத் தொடர்ந்து வனத்துறையின் முயற்சியால் பிடிக்கப்பட்ட கரடியானது உயிரிழந்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு கரடியானது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.  இதனால் கரடியைப் பிடிப்பதற்காக சுமார் 45-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பெத்தான்பிள்ளை கிராமத்தைச் சூழ்ந்துள்ளனர். பழங்களைக் கூண்டிற்குள் வைத்தும், அதிக ஒலி எழுப்பியும், தீப்பந்தங்கள் போன்றவற்றை பயன்படுத்தியும் கரடியை பிடிக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியே அச்சத்தில் உறைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

காட்டுத்தீ பரவல்; திணறும் வனத்துறை

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
spread of wildfires; A forest department that is stifling

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருவது வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் சவாலாகி வருகிறது. குன்னூரில் பாரஸ்ட் ஸ்டேல் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பற்றிய காட்டுத்தீயானது நாளுக்கு நாள் வேக வேகமாக பரவி வருவது அந்த பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் குன்னூரில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் மரங்கள், செடி, கொடிகள் ஆகியவை தீயில் கருகி உள்ளன. வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் என மொத்தமாக 150 க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தேனி மாவட்டம் போடி வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிச்சாங்கரை, ஊத்தாம் பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னூர், பெரியூர் மலை கிராமத்தில் வனப்பகுதியில் தீப்பற்றக் காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சின்னூர், பெரியூர் மலை கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவரும் ஆண்டவர் என்பவரும் விவசாய கழிவுகளை கொட்டி தீ வைத்தபொழுது தீ வனப்பகுதிக்கு பரவியது விசாரணையில் தெரிவந்துள்ளது. கோடைக்காலம் என்பதால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது இயல்பான ஒன்று என கருதப்பட்டாலும் சிலரின் அத்துமீறலால் காட்டுத்தீ உருவாகும் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.