தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்துஇரண்டாம்கட்ட தேர்தல் பிரச்சாரப் பணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார். இன்று (09.02.2021) ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில்பேசியதமிழக முதல்வர், இன்னும் 15 நாட்களில்பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கப்படும்எனத் தெரிவித்தார்.
முன்னதாக அரக்கோணத்தில் பேசிய முதல்வர், ''ஆட்சியில் இருக்கும்போது மக்களைச் சந்திக்காமல் தேர்தலின்போது மக்களை ஸ்டாலின் சந்திக்கிறார். நேரடியாக விவாதத்திற்கு அழைத்தால்ஸ்டாலின் வர மறுக்கிறார்'' எனப் பேசினார்.
அதனையடுத்து தற்போது ராணிப்பேட்டை அதிமுகஇளைஞர்,இளம்பெண்பாசறை கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், “கட்சிக்கும் தலைமைக்கும்விஸ்வாசமாக இருங்கள்” எனப் பேசினார்.சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையாகி நேற்று சசிகலாதமிழகம் திரும்பியுள்ள நிலையில்முதல்வர் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.