பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம் 

B.E., B.Tech. application registration Started

தமிழகத்தில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவும் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் https://tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், பள்ளிகள், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜுலை 19ஆம் தேதிவரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ரேண்டம் எண் ஜுலை 22ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் ஆகஸ்டு 8ஆம் தேதியும் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வானது ஆகஸ்டு மாதம் 16ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 18ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

Engineering
இதையும் படியுங்கள்
Subscribe