திருமானூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமா

30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள ஏரியை மீட்டுத்தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட சேனாபதி கிராமத்தில் உள்ள ராமுடையாள் ஏரி கடந்த 30 ஆண்டுகளாகத்தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஆக்கிரமிப்பில் உள்ள ராமுடையான் ஏரியை மீட்டுத்தர வேண்டும் எனவும் போர்க்கால அடிப்படையில் ஏரியை அளவீடு செய்ய வேண்டும் எனவும் அந்தக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றிய விவசாயிகள் திருமானூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உடனடியாக நில அளவை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் ஒரு வார காலத்திற்குள் ஏரியை மீட்டுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் சேனாபதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடம் உறுதி அளித்துள்ளார்.

Advertisment