ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கு வருகிற 30 ஆயிரம் கனஅடிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

Advertisment

bavanisagar dam reaches its fullest level

நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்துவருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து கூடியது. பவானிசாகர் அணை கடந்த நவ.8ம் தேதி அதன் முழுக்கொள்ளளவான 105 அடியை எட்டியது. தொடர்ந்து 23 நாள்களாக அணை முழுகொள்ளளவுடன் நீடித்து வந்தது. இந்த நிலையில் பில்லூர் அணைக்கு வரும் உபரிநீர், காரமடை பள்ளம், கொடநாடு வெள்ளநீர், ஆகியவை பவானிசாகர் அணைக்கு வந்து கலந்ததால் அணைக்கு நீர்வரத்து இன்று மதியம் 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

அணையில் முழுக்கொள்ளளவான 105 அடி நீர் இருப்பு உள்ளதால், இனி தண்ணீரை தேக்கி வைக்க இயலாத நிலையில் அணைக்கு வரும் 30 ஆயிரம் கனஅடிநீர் அணையில் இருந்து மேல்மதகு வழியாக ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அணையின் மேல்மதகில் உள்ள 9 மிகைநீர் போக்கி வழியாக பவானிஆற்றில் திறந்துவிட்டப்பட்ட தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் பவானி ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளநீரால் தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதிக்கப்படுவர் என்பதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்திற்குசெல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

வெளியேற்றப்படும் 30 ஆயிரம் கன அடி நீரும் பவானி கூடுதுறையில் காவேரி ஆற்றோடு கலந்து செல்கிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது. இவை அப்படியே வீணாக கடலிலும் கலக்கிறது.

Advertisment