
ஒரு குழந்தைக்காக இரண்டு தாய்மார்கள் சண்டையிட்டு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் தாரமங்கலத்தில் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி-பிரேமா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் பிரேமா மூன்றாவதாக கர்ப்பமடைந்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தையை அரியாகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்-கனகரத்தினம் தம்பதிக்கு அரசு விதிகளின்படி தத்து கொடுத்தனர்.
ஆனால், தாய் பிரேமா குழந்தையை பிரிந்திருக்க முடியவில்லை என சேலம் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார். தத்து கொடுத்தகுழந்தையை மீட்டுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், தத்து எடுத்துக்கொண்ட சீனிவாசன்-கனகரத்தினம் தம்பதியிடம் தாரமங்கலம் காவல் நிலையத்தில்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு தாய்மார்களும் குழந்தை தனக்குத்தான் வேண்டும் என பாசப்போராட்டம் நடத்தினர். இறுதியில் குழந்தை பழனிசாமி-பிரேமா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)