Published on 28/08/2022 | Edited on 28/08/2022

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில், நோயாளிகள் பயன்பாட்டிற்காக ரூபாய் ஆறு லட்சம் மதிப்பிலான பேட்டரி காரினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ,மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மருத்துவமனை முதல்வர் டாக்டர்.நேரு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், முக்கியப் பிரமுகர் க.வைரமணி மண்டலத் தலைவர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.