Advertisment

'பாத்ரூம் முழுக்க எலிப்புழுக்கை; மக்கள் எப்படி பயன்படுத்துவார்கள்'-திடீர் ஆய்வில் துரை வைகோ

nn

திருச்சி எம்.பியும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் திடீரென ஆய்வில் ஈடுபட்டதன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைகளை துரை வைகோ ஆய்வு செய்தார். அப்பொழுது கழிவறை பராமரிப்பின்றி சிதலமடைந்து இருந்ததால் அதிருப்தி அடைந்த அவர், அங்கிருந்த ஊழியர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பினார்.'' பாத்ரூம் ஃபிளஸ் எல்லாம் உடைந்துள்ளது. இதை எப்படி மக்கள் பயன்படுத்துவார்கள். புதுக்கோட்டை என்பது மிக முக்கியமான ரயில் நிலையம். அந்த ரயில் நிலையத்திலேயே கழிவறை இவ்வளவு மோசமாக இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த நடைமேடைக்கு இந்த ஒரு கழிவறை தான் இருக்கிறது. முறையாக பராமரிக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.

Advertisment

அதன்பிறகு நடைமேடையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவரிடம் பேசிய துரை வைகோ, ''எத்தனை பேர் டூட்டில இருப்பீங்க'' என கேள்வி எழுப்பினார். அதற்கு காவலர் ''இரண்டு பேர் இருப்போம் சார்'' என்றார். இன்னொருவர் எங்கே எனக் கேட்டதற்கு, 'சாப்பிடப் போயிருக்கிறார்' என பதிலளித்தார். நீங்க எங்கதங்குறீங்கஎன வினவியபோது 'ஸ்டேஷன்லயே தாங்கிக் கொள்வோம்' என்றார்.

''இங்கதான்பாத்ரூம் வசதி இல்லையே.பார்த்துவிட்டு வந்தேன். பாத்ரூம் ஃப்ளஸ் எல்லாம் உடைந்து போய் கிடக்கிறது. டாய்லெட் முழுக்க எலிப்புழுக்கை கிடக்கிறது. அவ்வளவு மோசமாக இருக்கிறது'' என்றார்.

அதன் பிறகு ரயில் நிலையத்தில் வைத்திருந்த வைக்கப்பட்டிருந்த பாட்டிலில் தானியங்கியாகதண்ணீர் நிரப்பும் மிஷினை ஆய்வு செய்த துரை வைகோ, புதிய வாட்டர் பாட்டிலை கொண்டு வந்து தண்ணீரை எடுத்து வாருங்கள் ஆய்வு செய்ய வேண்டும்' என அறிவுறுத்தினார்.

durai vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe